“சினிமா 18”

“சினிமா 18”
News18 Tamil Nadu program Cinema 18

திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு (1/2 மணி நேர நிகழ்ச்சி)

தமிழ் சினிமா இந்தியா சினிமாவின் தலைமையகமாக இருக்கிறது. தமிழ்த் திரையுலகில் இருந்து உருவாகும் இயக்குநர்களும், இசை அமைப்பாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் இந்திய திரையுலகை ஆட்சி செலுத்துகின்றனர். இந்நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் தமிழ் மற்றும் இந்திய சினிமா உலகின் அன்றாட நடப்புகளை அப்டேட் செய்யும் நிகழ்ச்சிதான் “சினிமா 18”.

ஒவ்வொரு நாளும் சினிமாவில் நடந்துவரும் மாற்றங்கள், திரைக் கலைஞர்களின் புதியப் படங்கள், அவர்கள் ஏற்கெனவே நடித்து; பங்கேற்று பணிபுரிந்து வரும் படங்களின் இப்போதைய நிலை, வசூல் நிலவரங்கள், உருவாகி வரும் படங்களின் இப்போதைய நிலை... என சினிமாவின் அனைத்து செய்திகளையும் 360 டிகிரி கோணத்தில் வழங்குகிறது சினிமா 18.

தமிழ் சினிமா செய்திகள் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஹாலிவுட் என ஒட்டுமொத்தத் திரையுலக செய்திகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். புத்தம் புதிய ட்ரெய்லர்களின் அணிவகுப்பு, திரை நட்சத்திரங்களின் பேட்டிகள் என இது ஒரு கலர்ஃபுல் காம்போ. சினிமா 18 நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நித்யா.

News18 Tamil Nadu program Cinema 18