“தீர்வு பாலம்”

“தீர்வு பாலம்”
News7 Tamil new program Theervu Palam

(திங்கள் முதல் வெள்ளிவரை காலை 11.00 மணிக்கு)

மக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து வெளிப்படுத்துகின்ற ஒரு நிகழ்ச்சிதான் “தீர்வு பாலம்“. திங்கள் முதல் வெள்ளிவரை காலை 11.00 மணிக்கு இந்த நிகழ்ச்சி நியூஸ்7 தமிழில் ஒளிபரப்பாகிறது.

ஒவ்வொரு நாளும் தமிழகம் சந்திக்கும் ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு அப்பிரச்சனையின் தன்மை, அதன் விளைவுகளை அலசி ஆராய்ந்து அந்த பிரச்சனைக்குறிய தீர்வை நோக்கி இட்டுசெல்கிறது இந்த நிகழ்ச்சி. இதில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் குறித்து, நிகழ்ச்சி அமைகிறது.

பிரச்சனைகளோடு இருக்கிற மக்களை அதை தீர்க்க வேண்டிய அரசோடு இணைக்கின்ற புள்ளிதான் இந்த தீர்வுப்பாலம். இந்த நிகழ்ச்சியை நெறியாளர் தேவேந்திரன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11.00 மணிக்கு நியூஸ்7 தமிழில் ஒளிபரப்பாகிறது.

News7 Tamil new program Theervu Palam