விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

சென்னை: இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரையில் ‘செட்’ அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்ட காட்சி படமாக்கப்பட்டது.

நடிகர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் விசைப்படகுகள் மற்றும் பாறைகள் மீது ஏறி நின்று நள்ளிரவு வரை படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தனர். நேரம் செல்ல செல்ல ரசிகர்களை கட்டப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அனைவரும் கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். அப்போது ரசிகர்கள் ஓடியதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது