“என்றென்றும் இனியவை”

“என்றென்றும் இனியவை”

புதுயுகம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் ‘என்றென்றும் இனியவை’. இன்று நீங்கள் பல பாடல்களை கேட்டாலும் உள்ளத்தில் நிலைக்கக்கூடிய முத்தான பாடல்கள் என்றால் அன்றைய காலத்தில் வெளியான பழைய பாடல்களாகத்தான் இருக்கும். இந்த பாடல்களை இன்றளவும் நின்று கேட்டு ரசித்து விட்டு செல்லக்கூடிய ரசிகர்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட ரசிகர்களின் உள்ளங்களை எல்லாம் கவரும் விதமாக புதுயுகம் தொலைக்காட்சி இந்த என்றென்றும் இனியவை நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமா ஜாம்பவான்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலரது திரைப்படங்களிலிருந்தும் இன்றும் மக்கள் கேட்டு ரசிக்கக்கூடிய இனிமையான பாடல்கள் இடம்பெறுகின்றன.

இந்த நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து வழங்குகிறார் நடிகர் கல்தூண் ராமச்சந்திரன்.. சிவாஜி, நாகேஷ் நடித்த கல்தூண் என்கிற படத்தில் நடித்தது முதல் இவரது பெயருடன் கல்தூண் என்கிற பட்டமும் ஒரு அடையாளமாக சேர்ந்துகொண்டது.. திரையுலகில் சுமார் 40 வருட அனுபவம் கொண்டவர் கல்தூண் ராமச்சந்திரன். தவிர  சின்னத்திரையிலும்  தனது பயணத்தை தொடரும் இவர்,  சின்னத்திரையில்  அதிக அளவில்  லைவ் நிகழ்ச்சிகளை  நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் இவர் பணியாற்றியபோது அனைத்து கலைஞர்களுடனும் நட்புடன் பழகியவர் என்பதால் ஒவ்வொரு பாடல் பற்றியும் அதில் நடித்த நடிகர்கள் பற்றியும் சுவாரசியமான விஷயங்கள், குறிப்புகளுடன் இந்த நிகழ்ச்சியை மிகவும் அழகாக தொகுத்து வழங்கி வருகிறார். நடிகர்களுக்கு மட்டும் என்றில்லாமல் இந்த நிகழ்ச்சியில் கதாநாயகிகளின் தனித்துவம் பெற்ற பாடல்களும் அதேபோல சுவாரசியமான குறிப்புகளுடன் தொகுத்து வழங்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை ஒளிபரப்பாகிறது., மேலும் மறு ஒளிபரப்பாக சனிக்கிழமை இரவு 1௦.3௦ மணி முதல் 11.30 வரையிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.