"பெண்கள் சாய்ஸ்"

"பெண்கள் சாய்ஸ்"

புதுயுக பெண்களின் நவநாகரிக பட்டறையாக விளங்கி கொண்டு இருக்கிறது "பெண்கள் சாய்ஸ்" எனும் நிகழ்ச்சி. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11:30 மணிக்கு புதுயுகம் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி பெண்களுக்கான மகிழ்ச்சி.

வீட்டில் இருக்கும் பரபரப்பான இல்லத்தரசிகளுக்கும், வேலைக்கு செல்லும் சுறுசுறுப்பான பெண்களுக்கும் இந்நிகழ்ச்சி எண்ணற்ற விஷயங்களை நேர்த்தியுடன் சொல்லித்தரும் பயிற்சி பட்டறை.

களிமண் கைச்சித்திரம் , ஜும்பா, மாடித்தோட்டம் , கலையும் கைவினையும் , நகம் அழகு கலை , உடற்பயிற்சி , அழகு குறிப்புகள் மற்றும் மருத்துவ ஆலோசனை போன்ற எத்தனையோ வித்தியாசமான தொகுப்புகளை உபயோகமாக சொல்லித்தருகிறது .

"பெண்கள் சாய்ஸ்" இந்த நிகழ்ச்சி வெறும் சாய்ஸ்" ஆக மட்டும் இல்லாமல், பல வெற்றிப்பெண்களின் வாய்ஸ் ஆகவும்  இருக்கும்  இந்த நிகழ்ச்சியின் இயக்கம் மற்றும் வடிவமைப்பை 'VE Touch' எனும் கிரியேட்டிவ் டீம் புதுயுகம் டிவியோடு இணைந்து நடத்துகின்றனர் . இந்நிகழ்ச்சியை தேவி ஸ்ரீ தொகுத்து வழங்குகிறார்.