‘எஸ்.பி.ஐ க்ரீன் மாரத்தான்’ - 2-வது எடிஷன்

‘எஸ்.பி.ஐ க்ரீன் மாரத்தான்’ - 2-வது எடிஷன்

எஸ்பிஐ குழுமம், நீடித்து நிலைக்கத்த குந்தசூழல் குறித்த விழிப்புணர்வுக்காக ‘எஸ்பிஐ க்ரீன் மாரத்தான்’ நிகழ்ச்சியின் 2-வது எடிஷனை தொடங்கிவைத்தது

• எஸ்பிஐ வங்கியின் ஸ்டெரஸ்ட் அசெட் அண்ட் காம்பிளையன்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குநரான அன்ஷூலா காந்த் [Anshula Kant, MD, (Stressed Assets, Risk & Compliance)]மற்றும் எஸ்பிஐ சென்னை வட்டத்தின் சிஜிஎம்மான வினய் எம்டோன்ஸ் [Vinay M Tonse, CGM, Chennai Circle]ஆகியோர் இந்நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
 
• இந்திய ஓட்டப்பந்தய நட்சத்திரமான வால்டிவேல் ஜெயலக்ஷ்மி, இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன், முன்னாள் தடகள நட்சத்திரம் சுரேஷ் சத்யா ஆகியோரும் இதில் பங்கேற்று சிறப்பித்தனர். 

• ஒல்காட் நினைவு உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற இந்த மாபெரும் மாரத்தான் போட்டியில் சுமார் 4000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றனர்.

• தூய்மையான மற்றும் பசுமையான நகரை உருவாக்குவதற்காக இதில் பங்கேற்ற அனைவருக்கும் ஆர்கானிக்டி-ஷர்ட்கள் வழங்கப்பட்டன

• முன்னாள் மேயர் திரு. ம சுப்ரமணியன் அவர்களும் இந்த மாரத்தானில் பங்கேற்றார்.

சென்னை–27 ஜனவரி,2019: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி,(State Bank of India - எஸ்பிஐ) இன்று நீடித்து நிலைக்கத் தகுந்த சுற்றுச் சூழலை மேம்படுத்தும் நோக்கில் தங்களது வருடாந்திர முதன்மைத் திட்டமான ‘எஸ்பிஐ கிரீன் மாரத்தான்’ [‘SBI Green Marathon’]போட்டியின் 2-வது எடிஷனைத் தொடங்கியது. எஸ்பிஐ வங்கியின் ஸ்ட்ரெஸ்ட் அசெட்அண்ட் காம்பிளையன் ஸ்பிரிவின் நிர்வாக இயக்குநரான அன்ஷூலா காந்த் (Anshula Kant, MD, (Stressed Assets, Risk & Compliance), SBI) மற்றும் எஸ்பிஐ சென்னை வட்டத்தின் சிஜிஎம் வினய் எம்டோன்ஸ் (Vinay M Tonse, CGM, Chennai Circle, SBI) ஆகியோர் இந்நிகழ்ச்சியை கொடிய சைத்து தொடங்கி வைத்தனர். சென்னையில் நடைப்பெற்ற இந்த மாபெரும் நிகழ்ச்சியில் சுமார் 4000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய ஆர்வலர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இந்திய ஓட்டப்பந்தய நட்சத்திரமான வால்டிவேல் ஜெயலக்ஷ்மி (Valdivel Jayalakshmi, Indian sprinter), இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன் (Niranjana Nagarajan, Indian woman cricketer), முன்னாள் தடகள நட்சத்திரம் சுரேஷ் சத்யா(Suresh Sathya, former Indian athlete) ஆகியோரும் இதில் பங்கேற்றனர். ஒல்காட் நினைவு மேல் நிலைப் பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சியில் நகரெங்கிலும் உள்ள பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு 
5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் மற்றும் 21 கிலோமீட்டர் கொண்ட மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பசுமையான எதிர்காலத்திற்கான உறுதிமொழியை எடுத்துகொண்டனர்.

வங்கியின் மூத்த அதிகாரிகளும் இந்த ‘ரன்ஃபார்கிரீன்’[“Run for Green”] ’பசுமைக்காக ஓடுவோம்’ என்ற அடிப்படை நோக்கம் கொண்ட இந்த ஓட்டப் பந்தயத்தில், மற்ற போட்டியாளர்களுடன் பங்கேற்று ஓடினர்.

தூய்மையான மற்றும் பசுமையான நகரத்தை உருவாக்கும் விதமாக அவர்களுக்கு ரசாயனம் இல்லாத இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக்டி-ஷர்ட்கள் வழங்கப்பட்டன. அவர்களின் எண்களைப் பொறித்து வழங்கப்பட்டிருந்த  ‘பிப்’களில் (bibs), மாரத்தான் போட்டி முடிவடைந்ததும் மரங்கள் நடுவதற்கான விதைகள் இருந்தன. 

எஸ்பிஐ வங்கி அடுத்த ஒரு மாதத்தில் புபனேஸ்வர், சண்டிகர், அகமதாபாத், பாட்னா, கொல்கட்டா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் இந்த மாரத்தானை நடத்தவுள்ளது. இவ்வங்கி ஏற்கெனவே கடந்த 4 மாதங்களில் புதுடெல்லி, லக்னோ, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம், குவாஹாட்டி, போபால் ஆகிய 8 நகரங்களில் மாரத்தான் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துள்ளது. 

எஸ்பிஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ் (SBI General Insurance) நிறுவனம் இந்த எஸ்பிஐ கிரீன் மாரத்தான் நிகழ்ச்சியின் சுகாதார பங்குதாரராக உள்ளது. எஸ்பிஐ லைஃப், எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட்ஸ் மற்றும் எஸ்பிஐ கார்ட் ஆகிய நிறுவனங்களும் இந்த குப்பைகள் இல்லாத நிகழ்வில் பங்களித்துள்ளன.