எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி நாள் - 2019

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி நாள் - 2019

ஆண்டு தோறும் எஸ்.ஆர்.எம் பல்கலையில் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆராய்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் நோக்கமே இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு சிறந்த தளத்தை ஏற்படுத்துவதே ஆகும். 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் , ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் என பல்வேறு புலங்களில் இருந்து வந்த ஆய்வுச் சுருக்கத்தில் இருந்து 932 ஆய்வுச் சுருக்கங்கள் மட்டுமே தேர்வுக் குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு 85 தங்க பதக்கமும் மற்றும் 35 வெள்ளி பதக்கமும் சான்றிதழும் சிறப்பு செய்யப்படும்.

இந்த ஆண்டின் ஆராய்ச்சி நாள் விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பெங்களூர் ஐஐடியின் இயக்குநர் பேராசிரியர் அனுராக் குமார் மற்றும் சிறப்புரையை வழங்க டில்லி டிஆர்டிஓ இயக்குநர் டாக்டர் எஸ். குரு பரசாத்  அவர்களும் வந்திருந்தனர். பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக உற்சாகமான உரையை வழங்கினார். அவர் பேசுகையில் இளம் ஆராய்ச்சியாளர் தங்கள் ஆய்வுகளை தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில் புது ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் உருவாகிக் கொண்டேயிருக்க வேண்டும். இதன் முயற்சியாக ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு என 5 கோடி ரூபாயை அறிவித்தார். அது மட்டும் இல்லாமல் அவர் பேசுகையில் குறிப்பிட்ட படி எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஒரு ஈர்ப்பினை ஆராய்ச்சி துறையில் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் குறிப்பிட்டார். 2700 பேராசிரியர்களில் 900 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பல்வேறு பேராசிரியர்கள் பல அரசு துறைகளில் இருந்து பல திட்டங்கள் மற்றும் நிதி உதவி பெற்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி 1500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் முனைவர் பட்டம் பயின்று வருகின்றனர் அதில் 900 மாணவர்கள் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் உதவி தொகையுடன் பயின்று வருகின்றனர். இதுவரை 540 ஆராய்ச்சியாளர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 125 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்து குறிப்புகளையும் கொண்டு இளம் ஆராய்ச்சியாளர் எப்போதும் ஏதாவது ஒரு புது முயற்சியை செய்வதே வழக்கம். இந்த விழா ஆராய்ச்சியாளர்களுக்கு நல்ல ஒரு மேடையாக அமையும் மற்றும் அதற்கு ஏற்ற ஒரு சூழல் இங்கு இருப்பதையும் நான் மகிழ்ச்சியோடு கூறிக்கொள்கிறேன் என்றார் டாக்டர் பாரிவேந்தர் .