தமிழக விவசாயிகள் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

தமிழக விவசாயிகள் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி
Shocking to see tamilnadu govt is still silent says SC

புது டெல்லி: தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில், 31 நாட்களாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவேரி வேளாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை. அதேசமயம் மாநில அரசும் இதுபற்றி எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் சார்பில் விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது வேதனை அளிப்பதாக கூறிய உச்ச நீதிமன்றம், விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு இது வரை மெத்தனப் பேக்கினைக் கடைப்பிடித்து வருவதும், தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. மாநில அரசு விவசாயிகளின் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்று கூறியது.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Shocking to see tamilnadu govt is still silent says SC