தேர்வுபயம் நீங்க சிறப்பு ஹோமங்கள்

தேர்வுபயம் நீங்க சிறப்பு ஹோமங்கள்

தன்வந்திரி பீடத்தில் தேர்வுபயம் நீங்க சிறப்பு ஹோமங்கள்.

வருகிற 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதியில் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வருகிற 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை ஸ்வாதி நக்ஷத்திரம் பஞ்சமி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி ஹோமத்துடன் சரஸ்வதி ஹோமமும் ஸ்ரீ வாணி சரஸ்வதி தேவிக்கு தேன் அபிஷேகமும், தாமரை பூக்களால் சிறப்பு அர்ச்சனையும் நடைபெறுகிறது.

தேர்வு பயம் நீங்க தன்வந்திரி ஹோமம் :

வருகின்ற பொது தேர்வில் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் தேர்வுபயம் நீங்கவும், ஞாபக மறதியை போக்கவும், ஜாதக ரீதியாகவும், சீதோஷ்ண நிலையினாலும் ஏற்படும் தோஷங்கள் அகலவும், படிப்பில் கவனம் செலுத்தவும், விளயாட்டில் ஏற்படும் ஆர்வம் தேர்வு முடியும் வரை தள்ளி வைக்கவும், நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானை வேண்டி சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெறுகிறது.

தன்வந்திரி பகவான் ஒரு தெய்வீக மருத்துவர் என்றல் மிகையாகாது. இவரை வணங்கி ஹோமம் பூஜை செய்தல் பலவிதமான நோய்களில் இருந்து காத்தும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க அருள் வழங்குவார். நோயற்ற  வாழ்வே குறைவற்ற செல்வம் எனவே பகவான் தன்வந்திரி பூஜித்து வணங்கி உடல் நலன் பெற்று வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறுவீர். உடலை சீராகவும், கொடிய நோய்களில் இருந்து காக்கவும் மஹா தன்வந்திரி ஹோமம் நடைபெறுகிறது.

சகலகலா வல்லியின் அருள்பெற

ஸ்ரீ சரஸ்வதி ஹோமம் :

பத்மாசனத்தில் தாமரையை ஆசனமாகக் கொண்டு கையில் வீணை ஏந்தியிருக்கும் சரஸ்வதி தேவி, கல்வி மற்றும் கலைகள் அனைத்துக்கும் சொந்தமானவள் இத்தேவியை வாக்தேவி என்றும் கலை வாணி என்றும் கலைமகள் என்றும் பல்வேறு பெயர்களில் போற்றி வழிபடுகின்றனர். இத்தேவியை குறித்து செய்யப்படும் ஹோமமே சரஸ்வதி ஹோமம் ஆகும். இவர் ஒலி, இசை, பாடல், ஞானம், மொழி ஆகிய 64 கலைகளின் வடிவாக இருப்பவள். மேலும் புத்தி கூர்மை மற்றும் ஞாபக சக்தி பெறவும், மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறவும் இந்த ஹோமம் செய்யப்படுகின்றது.

இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு அன்னை சரஸ்வதியின் அருளைப் பெற்று நல்லமுறையில் ஞாபக திறனை பெற்று வருகின்ற பொது மற்றும் ஆண்டு தேர்வில் பங்கு பெற்று, அதிக மதிபெண்கள் பெற்று, கலை, கல்வி மற்றும் பிற துறைகளில் சிறந்து விளங்க வாழ்த்துகின்றோம். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் யாகத்தின் மூலம் சக்தி மிக்க ஆற்றல் பெற்று உங்கள் படைப்பாற்றலையும் மேம்படுத்த பிரார்த்திகின்றோம்.

சரஸ்வதி ஹோமத்தின் சிறப்புகள்

மாணவ மாணவிகளின் நினைவாற்றல் அதிகரிக்கவும், அறிவாற்றல் மற்றும் உரையாடல் திறன் பெருகவும், வெற்றிக்கான நம்பிக்கை மேம்படவும், இலக்குகளை அடைவதற்கான சக்தி கிடைக்கவும், உங்கள் கல்விப் பயணம் மேன்மை அடையவும், மாணவர்கள் சிறந்த முறையில் கவனத்துடன் கல்வி பயின்று, தேர்வுகளில் அதிக மதிபெண்கள் பெற்று வெற்றி பெறவும் பெருமையும், புகழும் சேரவும். திறமை மற்றும் நம்பிக்கையில் வளம் பெறவும் தன்வந்திரி பீடத்தில் வருகிற 24.02.2019 அன்று ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஸ்ரீ தன்வந்திரி ஹோமத்துடன் சரஸ்வதி ஹோமம் நடைபெறுகிறது.

மேலும் மாணவ மாணவிகள், கல்வி, அறிவு, மற்றும் இசை போன்ற அனைத்துத் துறைகளிலும், எடுக்கும் முயற்சிகள் வெற்றி வாய்ப்பை தரும். இந்த ஹோமத்தின் மூலம் ஆசிரியர்களுக்கும், விற்பனை பிரதிநிதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், ஜோதிடர்களுக்கும், குருமார்களுக்கும் மற்றும் வியாபார பெருமக்களுக்கும் வல்லமை கிடைத்து, வாணீ சரஸ்வதியின் பேரருள் கிடைக்கபெறலாம், இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்களுக்கு ஸ்வாமிகள் ஆசியுடன் ஹோமரக்ஷை, குங்குமம், அபிஷேக தேன், நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் ஏலக்காய் போன்ற விசேஷ பிரசாதங்களை பெற்று இங்கு பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ மேத தக்ஷ்ணாமூர்த்தி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரை தரிசித்து தேர்வில் வெற்றி பெற்று, கல்வி வளத்துடன் வாழ்வில் நலம் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சரஸ்வதி ஹோம மந்திரம்

ஓம் அர்ஹம் முக கமல் வாசினீ பாபாத்ம க்ஷயம் காரி வாத் வாத் வாக்வாதினீ சரஸ்வதி ஐங் ஹ்ரீங்க் நமஹ ஸ்வாஹா

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Web: www.danvantritemple.org , www.danvantripeedam.blogspot.in

Email: danvantripeedam@gmail.com