தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் அவதி!

தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் அவதி!
Tamil Nadu bus fare hike people suffer

சென்னை: தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திடீரென்று அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுவரை சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்பட்ட நகர, மாநகர பஸ்களில் (1 முதல் 20 நிலை வரை) குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.12 ஆகவும் இருந்தது. அந்தவகை பஸ்களில் இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.19 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.14 ஆகவும் இருந்தது. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல் வால்வோ பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-ல் இருந்து ரூ.25 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்:

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒரு நாள் முழுவதும் பயணம் செய்ய பயன்படும் ரூ.50 டிக்கெட் விநியோகிக்க படாததால் தொலைதூரம் பயணம் செய்வோர் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tamil Nadu bus fare hike people suffer