என்னால் முடியும்

என்னால் முடியும்
Vendhar TV program Ennal Mudiyum

(ஞாயிறு தோறும் பகல் 12.30 மணிக்கு)

வேந்தர் டிவியில் ஞாயிறு தோறும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புத்தம் புதிய நிகழ்ச்சி, "என்னால் முடியும்".

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர்களை இனங்காணும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் நாடு முழுவதிலும் இருந்து கலந்துகொண்டு ஆர்வத்தோடு தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்.

பாடும் திறன், நடனத்திறமை, ஒரு நிகழ்ச்சியை எந்த அளவுக்கு வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதை நிரூபிக்க அனைவரும் துடிப்போடு திறமைகாட்டிய விதம் நேயர்களை மிகவும் கவரும் விதத்தில் உள்ளது.

எந்த தொலைக்காட்சியிலும் இல்லாத வகையில் புத்தம் புதிய நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி புதியவர்களின் திறமையை உலகிற்குத் தெரியப்படுத்தும் விதத்தில் உருவாகி, புதிய மெருகோடு பூத்துக் குலுங்குகிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் செபாஸ்டியன் மற்றும் ப்ரீத்தி.

Vendhar TV program Ennal Mudiyum