கஜா புயல்: தமிழக ஆளுநர் நிவாரண நிதி

கஜா புயல்: தமிழக ஆளுநர் நிவாரண நிதி

கஜா புயல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதமடைந்தது, சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.