சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடி
CSK Team takes INR 20 crore as prize money

மும்பை: 11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சு தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்.

சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாட்சன் 117 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இதையடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. ஆட்டநாயகன் விருதை ஷேன் வாட்சன் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம், ரூ.20 கோடி பரிசு தொகையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது.

CSK Team takes INR 20 crore as prize money