திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
DMK leader Karunanidhi again admitted in Chennai Kaveri hospital

சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை முடிந்து செயற்கை சுவாச குழாய் பொருத்தப்பட்ட நிலையில் வீடு திரும்பினார்.

இதனையடுத்து, கடந்த 7 மாதங்களாக வீட்டிலிருந்தபடியே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்தநிலையில், திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் இன்று காலை 6.30 மணியளவில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக்குறித்து, காவிரி மருத்துவனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள உணவுக் குழாய் மாற்றப்படுகிறது. இது சாதாரண மருத்துவ பரிசோதனை தான். மருத்துவமனையில் இருந்து இன்று மாலைக்குள் வீடு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DMK leader Karunanidhi again admitted in Chennai Kaveri hospital