எம்.ஜி.ஆரின் 31 வது நினைவு நாள் - நூல்கள் வெளியீடு

எம்.ஜி.ஆரின் 31 வது நினைவு நாள் - நூல்கள் வெளியீடு

21.12.2018 அன்று டாக்டர். எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஜி.ஆரின் 31-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வின் போது "இதயக்கனி" இதழ் ஆசிரியர் திரு. எஸ். விஜயன் எழுதிய "எம்.ஜி.ஆரின் பயணம்", "அம்மா என்றால் அன்பு" ஆகிய நூல்களை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் திரு. பொள்ளாச்சி வ. ஜெயராமன் வெளியிட, எம்.ஜி.ஆரின் செல்லபிள்ளையாக மதிக்கப்பட்ட வில்லிவாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிமுக அமைப்பு செயலருமான திரு. ஜே.சி.டி பிரபாகர் பெற்றுக் கொண்டார்.

முன்பு அந்த கல்லூரி சத்யா ஸ்டுடியோவாக இருந்த போது அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை, எம்.ஜி.ஆருடன் தங்கள் அனுபவங்களை துணை சபாநாயகரும், ஜே.சி.டி பிரபாகரும், நடிகர் வெண்ணிற ஆடை நிர்மலாவும், நடிகரும், இயக்குனர் திரு. அண்ணாதுரை கண்ணதாசனும் (கவியரசரின் புதல்வர்) பகிர்ந்து கொண்டபோது மனம் நெகிழவைத்தன.

கல்லூரி சார்பில் தாளாளர் திருமதி. லதா ராஜேந்திரன், வழக்கறிஞர் திரு. குமார் ராஜேந்திரன், விருந்தினர்களை கவுரவித்தனர், கல்லூரி டீன், தமிழ்த்துறை தலைவர் திருமதி. அபிதா சபாபதி நிகழ்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.