“நியூஸ் கராத்தே”

“நியூஸ் கராத்தே”

நாள் தோறும் நடைபெறும் செய்திகளை  நையாண்டி பாணியில் வழங்கும் நிகழ்ச்சி “நியூஸ் கராத்தே”. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:30 மணிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியில் வெளியாகும் இந்த ஜாலி கேலி நிகழ்ச்சியில் நான்கு பகுதிகள் உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள்  ஆகியோர் மைக் பிடித்து ஆற்றும் சொற்பொழிவை  தொகுத்து தெறிக்கவிடும்  ‘மைக்’கில் ’டாக்’சன் பகுதி காண்போரின் சிரிப்புக்கு கேரண்டி . இதனையடுத்து வருவது தொலைக்காட்சி விவாதங்களில் நடைபெறும் சண்டைகளை எடுத்து பஞ்சாயத்து பண்ணும் பைட் கிளப் என்கிற சுவாரஸ்யமான பகுதி.  சமூக வலைதளங்களில் நடைபெறும் சண்டைகள், சர்ச்சைகள்,  சம்பவங்களை கலந்துகட்டி அடிக்கும் WTF பகுதியும் , உள்ளூர் ஆளுமைகளின் குரலை உலக தலைவர்களின் பேச்சுடன் பொருத்தும் கிராஸ் டாக் பகுதியும் நேயர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை வேல் பிரசாந்த் தொகுத்து வழங்க புதிய பரிதி தயாரித்து அளிக்கிறார்.