அதிமுக அமைச்சர்களுடன் தினகரன் ஆலோசனை

அதிமுக அமைச்சர்களுடன் தினகரன் ஆலோசனை
TTV dinakar in discussion with AIADMK ministers

சென்னை: அதிமுக அமைச்சர்கள், சட்டவல்லுனர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் டி.டி.வி தினகரன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது: "பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்து செயல்படுவது பற்றி ஆலோசனை செய்வதற்காகவே வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார், மேலும் டிடிவி தினகரன் ராஜினாமா செய்கிறார் என்ற தகவல் கற்பனையானது என்று அவர் கூறினார்.

இந்த அலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

TTV dinakar in discussion with AIADMK ministers