டாஸ்மாக் மதுக்கடைகளில் பீர் விலை உயருகிறது

டாஸ்மாக் மதுக்கடைகளில் பீர் விலை உயருகிறது
Tasmac shops Beer Price to be raised

சென்னை: அரசின் வருமானத்தில் முக்கிய அங்கம் வகிப்பது டாஸ்மாக் நிறுவனம். தமிழகம் முழுவதும் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்த அரசு நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் மதுக்கடைகள், பார்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.22 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது.

இந்நிலையில், அனைத்து பீர் வகைகளும் ரூ.10 விலை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் போன்ற உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.40 வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tasmac shops Beer Price to be raised