உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட வால்வை பயன்படுத்தி அப்பல்லோ மருத்துவமனை சாதனை

உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட வால்வை பயன்படுத்தி அப்பல்லோ மருத்துவமனை சாதனை

அப்பல்லோ மருத்துவமனை இந்தியாவில் முதல் முறையாக டிரான்ஸ்ஃபெமோரல் பல்மோனரி வால்வு சிகிச்சையை முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வால்வைக் கொண்டு வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது!

சென்னை, ஏப்ரல் 9, 2019: ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற பன்நோக்கு சிறப்பு சிகிச்சைகளுக்கான தொடர்செயல்பாட்டு மருத்துவமனையான அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், இந்தியாவிலேயே முதல்முறையாக முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வால்வை பயன்படுத்தி’ டிரான்ஸ்ஃபெமோரல் பல்மோனரி வால்வு (Transfemoral Pulmonary Valve Implantation) சிகிச்சையை வெற்றிகரமாகச்செய்து சாதனை படைத்துள்ளது. [மார்புப்பகுதியில் அறுவைச்சிகிச்சை செய்யாமல், டிரான்ஸ்ஃபெமோரல் அணுகுமுறை என்று அழைக்கப்படும் தொடையும் இடுப்பும் சேரும்பகுதியில் உள்ள ஒரு பெரிய நரம்புவழியாக  (தொடை நரம்பு- Femoral vein)குறைந்தளவே ஊடுருவும் ஒரு நுண்குழாயை உள்செலுத்தி அதன்வழியாக இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மூச்சுத்திணறல் அறிகுறிகளுடன், 26 வயதான பெண் ஒருவர் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸூக்கு அழைத்து வரப்பட்டார். அவரைப்பரிசோதனை செய்து பார்த்தபோது டெட்ராலஜி ஆஃப் ஃபாலட்(Tetralogy of fallot) என்ற பிரச்சினையால் (இதயப்பகுதியில் பெரிய ஓட்டை மற்றும் நுரையீரலுக்கு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதால் ஏற்படும் பிரச்சினை) அவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரது சிறுவயதில் இந்நோயைச் சரி செய்ய 2 அறுவைச்சிகிச்சைகள் செய்யப்பட்டிருந்தன.  மேலும் 2009-ம் ஆண்டில் அவருக்கு வால்வு மாற்று அறுவைச்சிகிச்சை செய்யப்படிருந்தது. இச்சிகிச்சைக்கு பிறகு அவரது இதயத்தின் உள்புறமாக வால்வில் தொற்று (infective endocarditis of pulmonary valve) ஏற்பட்டிருந்தது. 
 
இச்சிகிச்சை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நோய்த்தொற்றை நீக்குவதற்காகவும், வால்வை மாற்றுவதற்காகவும் அவருக்கு மீண்டும் ஒரு முறை திறந்த இதய அறுவைச்சிகிச்சை நடத்தப்பட்டது.
அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்தபோது, அறுவைச்சிகிச்சை மூலம் அவருக்கு பொருத்தப்பட்டுள்ள வால்வில் அடைப்பு அதிகரிப்பது தெரியவந்தது. தனது திருமண வாழ்க்கை மற்றும் மகப்பேறு ஆகிய விஷயங்களைப் பற்றி நோயாளி கவலைப்பட்டதால், அவரது இதயத்தின் வலதுபுறத்தில் ரத்தத்தை உள்செலுத்தும் அறைக்கு [pumping chamber] சேதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் புதிதாக வால்வை மாற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இந்த மருத்துவநடை முறையைப்பற்றி அப்பல்லோ மருத்துவமனையின் இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட்டாக்டர். சிஎஸ்.முத்துக்குமரன்(Dr. CS. Muthukumaran, Interventional Cardiologist, Apollo Hospitals) கூறும்போது, “சிறுவயது முதலே இந்த நோயாளி ஏராளமான அறுவைச்சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தார். எனவே அவருக்கு மீண்டும் ஒரு அறுவைச்சிகிச்சையை மேற்கொள்வது அவரது உயிருக்கு ஆபத்தாக இருக்கும் என்று கருதினோம். இந்நிலையில் அறுவைச்சிகிச்சை இல்லாமல் மேற்கொள்ளும் டிரான்ஸ்ஃபெமோரல் இம்ப்ளாண்டேஷன் (Transfemoral implantation) மருத்துவ நடைமுறை இப்பிரச்னைக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும் என்று கருதினோம். 

இது போன்ற சிகிச்சைகளுக்கு இது வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வால்வுகளையே பயன்படுத்தி வந்துள்ளோம். இந்தியாவில் மெரில்லைஃப் சயின்ஸஸ் (Meril Life sciences) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட MYVAL என்ற வால்வை இந்த சிகிச்சையில் முதல் முறையாக பயன்படுத்தினோம். இந்த இளம்பெண்ணுக்கு உதவுவதற்காக பல்மோனரி (நுரையீரல் குழாய் - lung tube) நிலையில் வால்வை பயன்படுத்தி உள்ளோம்” என்றார்.

இந்த மருத்துவ சிகிச்சை 90 நிமிடங்களுக்குள் செய்து முடிக்கப்பட்டு, நோயாளி 2 நாட்களில் வீடு திரும்பினார். இந்த வால்வு மாற்று சிகிச்சையானது அந்தப்பெண்ணிற்கு புதுவாழ்வு அளித்திருக்கிறது. இனிவரும் காலத்தில் அவர் திறந்த இதய அறுவைச்சிகிச்சை செய்துகொள்ள வேண்டியிருக்காது. 

இது போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சிறு வயதில் அறுவைச்சிகிச்சை செய்து தற்போது வால்வுமாற்றத்துக்காக காத்திருக்கும் அனைவரின் வாழ்க்கையையும் இச்சிகிச்சை மாற்றியமைக்கும்.