”உழவே தலை விருதுகள் 2017”

”உழவே தலை விருதுகள் 2017”
Uzhave Thalai Awards 2017

இந்திய விவசாயிகள் தினமான வரும் டிசம்பர் 23ம் தேதியை விவாசாயிகளையும் விவசாயத்தையும் போற்றும் வகையில் இந்த ஆண்டு முதல் “உழவே தலை விருதுகள் 2017” என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாட திட்டம் தீட்டியுள்ளது இந்திரா குழுமம். விவசாயம், விவசாயி, விவசாயத்தில் நாட்டமுள்ள பொதுமக்கள் இவர்கள் மூவரையும் இணைப்பதை தன் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது இந்திரா குழுமத்தின் இந்திரா ஆக்ரோ டெக்.

”உழவே தலை விருதுகள் 2017” வழங்கும் விழா வரும் சனிக்கிழமை டிசம்பர் 23ம்தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா ஆடிட்டோரியத்தில் மாலை 5.30 மணி முதல் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

இவ்விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில் விழாவின் தலைமை விருந்தினராக தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.K.பாண்டியராஜன், இயக்குனர் திரு கே.பாக்கியராஜ், திரைப்பட இயக்குனர், ஒளி ஓவியர் திரு. தங்கர்பச்சான், பாரத ரத்னா A.P.J.அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் திரு.பொன்ராஜ் வெள்ளைச்சாமி,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னால் தலைவர் திருமதி.தமிழ்ச்செல்வி, பொதிகை தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சிப்பிரிவு தலைவர் திருமதி.ஆண்டாள் பிரியதர்ஷினி மற்றும் இந்திரா குழுமத்தின் நிறுவனர் திரு.பூபேஷ் நாகராஜ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இவ்விழாவில் சேனாபதி காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் திரு.கார்த்திகேய சிவசேனாபதி, நடிகர் திரு.ராகவா லாரன்ஸ், நடிகர் விவேக், வேளாண் பொருளியல் நிபுணர் திரு.பாமையன் போன்ற பலருக்கு உழவே தலை விருதுகள் வழங்கி சிறப்பிக்கவுள்ளது இந்திரா குழுமம்.

Uzhave Thalai Awards 2017