திருவாரூர் தொகுதி இடைதேர்தல் ரத்து ஏன்?

திருவாரூர் தொகுதி இடைதேர்தல் ரத்து ஏன்?

திருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு வரும் வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்? என்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது:- " திருவாரூர் தவிர மற்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் வரை இடைத்தேர்தல் வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது. கஜா புயல் நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டி டிசம்பர் 3 ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா கடிதம் எழுதியிருந்தார். தமிழக அரசிடம் கருத்து கேட்க உள்துறை அமைச்சகமும் அறிவுறுத்தியிருந்தது. நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும் அறிக்கை அளித்து இருந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.